‘கொத்தமல்லி’ என தெரிவித்து எட்டரை கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் இறக்குமதி!

84 0

‘கொத்தமல்லி’ எனத் தெரிவித்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு கோடியே அறுபது லட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (17) கைப்பற்றியுள்ளது.

இந்த பீடி இலைகள் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரண்டு 20 அடி நீள கொள்கலன்களில் கொழும்பு துறைமுகத்துக்கு ஹோமாகம பகுதியில் வசிக்கும் ஒரு இறக்குமதியாளரால் கொண்டு வரப்பட்டது.

இந்த இரண்டு கொள்கலன்களிலும் 11,460 கிலோ எடை கொண்ட பீடி இலைகள்   இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பீடி இலைக்கு வரி விலக்கு அளித்திருந்தால், அரசுக்கு, ஏழு கோடியே எழுபது லட்சம் ரூபா வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.