கடற்படை அட்டூழியம்: பாம்பனில் மறியல்

191 0

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். மேலும், பாம்பனில் சாலைமறியல் போராட்டத்தை 18ஆம்  திகதி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சதீவு பகுதியில் வைத்து கைது செய்தனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடல் எல்லை பிரச்சனையை காரணம் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் ஈவுஇரக்க மற்ற காட்டு மிராண்டித்தன நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் சூழலில் இந்தியா சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழக அரசு சார்பில்டன் கணக்கில் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனாலும் இலங்கை கடற்படையின்போக்கில் மாற்றம் தெரிந்த பாடில்லை. இதனிடயே தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.