அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

404 0

2024 வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (16) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 20 ஆயிரத்தால் அதிகரியுங்கள்”, ” எரிபொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறையுங்கள்” , “பொருட்களுக்கு விலைகளை அதிகரிக்கும் போது இரச ஊழியர்களை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று இதுபோன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.