மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமானது அல்ல என்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
நிலக்கரி தேவை அதிகரிப்பதை விட தேவை குறைவதையே ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
மே 15ஆம் திகதி கிலோ ஒன்றுக்கு 68.6 ரூபாவாக இருந்த நிலக்கரியின் விலை 52.6 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.