மன்னார் தென்கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆமைகளை பார்வையிட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும், அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார், சிலாவத்துறை கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.