அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக மற்றுமொரு மனு இன்று திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்துக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் நாட்டின் அரசமைப்புக்கு எதிரானது என கர்தினால் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.