தயாசிறிக்கு புதிய பதவி வழங்குமாறு ஆலோசனை

74 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட  பாராளுமன்ற உறப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியில் இணைந்தால் கட்சியின் தலைவர், செயலாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவிகளை தவிர வேறு பதவிகள் வழங்கப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவருக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனஇ கட்சியின் மூத்த தலைவர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் 6 பேர் உள்ள நிலையில்,   தயாசிறி ஜயசேகர அப்பதவியைப் பொறுப்பேற்றால்,  சிரேஷ்ட உப தலைவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும்.

இதேவேளை,  தயாசிறி ஜயசேகர குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.