கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான ராமையா ஜெயராஜ் சப்புகஸ்கந்த கோனவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, சந்தேக நபரும் பொலிஸாரும் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.