யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.

390 0

14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்த மக்களுடன் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடர்ஏற்றி மலர்தூவி வணக்க நிகழ்வு முடிந்தபின் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

தொடர்ந்து விடுதலை நடனங்கள் விடுதலைப் பாடல்கள்,கவிதை,வில்லுப்பாட்டு,சிறப்புரையுடன்இறுதியில் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு,நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.