காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்பாதுகாப்பு என்ற நிலைக்கு அப்பால் சென்றுவிட்டது என தெரிவித்துள்ள சீனா காசா மக்களிற்கு எதிரான கூட்டுத்தண்டனையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இதனை தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டவேளை சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஐக்கியநாடுகள் சர்வதேச சமூகத்தின் குரல்களை செவிமடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இஸ்ரேலிற்கு எதிராக சீனா வெளியிட்டுள்ள கடுமையான கருத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.