இஸ்ரேல் காசாமீது வெள்ளை பொஸ்பரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை உறுதி செய்துள்ளது.
வெள்ளை பொஸ்பரஸ் ஆட்டிலறி எறிகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தாக்குதலை மேற்கொள்கின்றது என உறுதிசெய்ய முடிந்துள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காசாஉள்ள ஹோட்டல் ஒன்றின் மீதான தாக்குதலிற்கு வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்துவருகின்றோம் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இஸ்ரேல் காசாவிற்கு மின்சாரத்தை வழங்கவேண்டும் 16 வருட முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காசா மக்களிற்கு எதிரான கூட்டுதண்டனை சட்டவிரோதமானது யுத்த குற்றம் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.