சீனாவுக்கான விஜயத்தை நிறைவுசெய்த பின்னரே தற்போது வெற்றிடமாக உள்ள சுற்றாடல் அமைச்சர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிப்பாரென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சுற்றாடல் அமைச்சராக இருந்த நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சுப் பதவியையும் இழந்தார்.
அதனை தொடர்ந்து, அமைச்சர் எவரும் நியமிக்கப்படாத நிலையிலிருந்த சுற்றாடல் அமைச்சு, அரசியலமைப்பு விதிகளின்படி, ஜனாதிபதியினது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தற்போது சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர், புதிய சுற்றாடல் அமைச்சர் ஒருவரை நியமிக்கவுள்ளார் என அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.