தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய பயணிகள் கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஆகியோர் வரவேற்றனர்.
குறித்த கப்பலானது நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடையும்.
நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படடகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு பயணிகள் தயார் நிலையில் உள்ளனர். குறித்த கப்பல் மீண்டும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.