எனது உறவினர்கள் ஆறு பேரை இழந்துள்ளேன்!

112 0
image

அமெரிக்காவின் சியட்டலில் வசிக்கும் பாலஸ்தீன பெண்ணொருவர் காசாவில் தனது குடும்பத்தை ஆறுபேரை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐவர் 18 வயதிற்;கு குறைவானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிஸில் இடம்பெற்ற தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர்,அவர்கள் அப்போதுதான் கொண்டாட்டங்களை முடித்திருந்தனர் எனது உறவினரின் மகன் 18 வயது தனது பல்கலைகழக வாழ்க்கையை சில மாதங்களிற்கு முன்னரே ஆரம்பித்திருந்தார் என ஜரேபா பரோட் நினைவுகூர்ந்துள்ளார்.

எனது இன்னொரு உறவினரான வாலிட் 15 வயது அப்போதுதான் குரானை ஒதிமுடித்திருந்தார்,அவர்கள் மிகவும் புத்திசாலிகள் ஊக்கமுடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் உடல்களை எப்படி ஏனைய உறவினர்கள் இடிபாடுகள் மத்தியிலிருந்து இழுத்தெடுத்தார்கள் என்பதை அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது உறவினர்களுடனான தொடர்பு புதன்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகின்றார்,கையடக்கதொலைபேசி இயங்கிக்கொண்டிருப்பது அந்த பகுதியில் தங்கம்போன் பெறுமதியான விடயம் அங்கு மின்சாரம் இல்லை என அவர் தெரிவிக்கின்றார்.

காசாவின் வடபகுதியிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டபோதிலும் ஏன் அவர்கள் வெளியேறவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்துகின்றார்.

இது ஒருபொறியாக இருக்கலாம் செல்லும் வழியில் வாகனங்கள் இலக்குவைக்கப்படலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் இல்லாவிட்டால் வீட்டிலேயே கொலை செய்யப்பட அவர்கள் விரும்பியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.