பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல்

99 0
image

இஸ்ரேலின் டெல்அவியில் பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசியின் செய்தியாளர்களும் அவர்களது அராபிய பிரிவின் குழுவினரும் ஹோட்டலிற்கு சென்றுகொண்டிருந்தவேளை அவர்களது வாகனத்தை மறித்த இஸ்ரேலிய பொலிஸார் ஊடகவியலாளர்களை வாகனத்திலிருந்து பலவந்தமாக இறக்கி அவர்களை சோதனையிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்றவேளை பொலிஸார் கையடக்கதொலைபேசிகளை பறித்து நிலத்தில் வீசியதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

டெல்அவியிலிருந்து செயற்படும் எங்கள் அராபிய பிரிவினர் ஊடகம் என தெளிவாக குறியிடப்பட்ட வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் காசா இஸ்ரேல் மோதல்கள் குறித்து செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் சூழல் அவசியம் என பிபிசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.