‘வடக்கில் முக்கிய மதிப்புமிக்க வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டது’ எனும் தலைப்பிலான விசேட கருத்துரை நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜஸ்மின் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டிலும் நஷனல் ட்ரஸ்ட் வங்கியின் அனுசரணையுடனும் நடைபெறும் இந்த இலவச கருத்துரை நிகழ்வில் கலாநிதி எஸ்.விஜேயமோகன் கருத்துரையை வழங்கவுள்ளார். கலாநிதி எஸ்.விஜயமோகன் வடக்கு மற்றும் கிழக்கில் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகள் பாதுகாப்புக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் ஒருவராக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
அத்துடன் அவர், வனவிலங்கு சூழலியல், பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இவர் வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதோடு மனித-யானை மோதலில் குறிப்பாக குறைந்த செலவில் தொங்கும் மின்சார வேலியை பரிசோதனை செய்பராக உள்ளதோடு அனைத்து வனவிலங்குகளையும் வனப்பகுதிகளையும் பாதுகாப்பதற்காக பிரசாரசச் செயற்பாட்;டாளராகவும் செயற்படுகின்றார்.
அத்துடன், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆசிய யானைகள் குழு மற்றும் முதலை நிபுணர்கள் குழுவின் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் உள்ளதோடு பல்வேறு வெளியீடுகளையும் செய்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கின் பல இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியா இருக்கும் அவர் பல்லுயிர் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பகுதிகள் உட்பட தேசத்தின் முக்கியமான விலைமதிப்பற்ற பகுதிகள் தொடர்பில் தனது பரந்த அறிவாற்றலால், யதார்த்தத்தைப் வெளிப்படுத்துபவராகவும் உள்ளார்.
இதேநேரம், 2009 இல் யுத்தம் முடிவடைந்தவுடன், வடக்கு மற்றும் கிழக்கிற்கு உடனடியாக வருகை தந்தவர்கள், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் எஞ்சியிருக்கும் பலவற்றைப் போலல்லாமல், அழியாமல், பாதுகாக்கப்பட்டு, அழகான காடுகளைக் கண்டு வியந்தனர். வனவிலங்குகள், சின்னச் சின்ன உயிரினங்கள் கூட, மணலில் தங்கள் இருப்பதற்கான தடயங்கள் காணப்பட்டன. பரந்த காடுகளும் அதிக எண்ணிக்கையிலான வனவிலங்குகளும் காணப்பட்டன.
அவ்வாறு 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை தற்போது மாறிவிட்டது. பெருமளவில் காடுகள் அழிக்கப்படுவதும், வனவிலங்குகள் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. யானை – மனித மோதல் முன்னெப்போதும் கண்டிராத நிலையை எட்டியுள்ளது.
நாட்டின் இயற்கைச் செல்வம் தீவின் பிற பகுதிகளில் உள்ளது போல, இதுவரை கண்டிராத அளவில் இங்கும் அழிக்கப்பட்டு வருவதை பொதுமக்கள் அறியவில்லை. கணிசமான மனித மற்றும் நிதிச் செலவில் விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதிகள் அனைத்தும் ஓரிரு தசாப்தங்களில் அழிக்கப்படுமா?
இந்த அற்புதமான இடங்கள் மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு உலகிற்குக் காட்டப்பட்டால் நாட்டுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் கொண்டு வரக்கூடிய வருவாயின் அளவு என்ன?
சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல், அழிவுகரமான பிரளயங்களைத் தொடர்ந்து நீடித்த வறட்சியால் தீவில் ஏற்கனவே ஏற்படுத்தத் தொடங்கியுள்ள அழிவு என்ன? பேராசையின் பலிபீடத்தில் எதிர்காலத்தை தியாகம் செய்யலாமா? உள்ளிட்ட கேள்விகளும் தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.