மூடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு

106 0

மண்சரிவு காரணமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதி இன்று (13) மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கக்கூடிய வகையில் இடது பக்க பாதைகள் இரண்டு மாத்திரம் இருபுறமும் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியின் வலதுபுறம் வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக தடை செய்யப்பட்டிருக்கும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.