மன்னா ரமேஷின் சகா அதிரடிப்படையினரால் கைது!

162 0

இருவரைக் கொலை செய்து,  இருவரைப் காயப்படுத்திய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச்  செலுத்திச் சென்றதாக கூறப்படும் மன்னா ரமேஷின் சகா ஒருவர் தல்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அவிசாவளை கலபலன கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து  6,100 மில்லிகிராம் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி மற்றும் 4,340 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் T-56 துப்பாக்கியால் சுட்டு இருவரைக் கொன்று இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துக்குப்  பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிளைச் சந்தேக நபரரே  செலுத்திச் சென்றார்  எனத் தெரியவந்துள்ளது.