சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, அங்கு தனக்காக வசதிகளை பெற்றுக் கொண்டு அதற்கான ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் மாலைதீவு பிரஜை ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.