தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு

83 0

ண்சரிவினால் தடைப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மண் அகற்றும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

எனினும், மற்றொரு இடம் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் ஆர். டி. கஹடபிட்டிய  தெரிவித்துள்ளார்.

இதன் நிலைமையை சரிபார்த்த பின்னரே வீதியை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.