பிரேதஅறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள்

198 0

காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக  மாறுகின்றன  என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு  மின்நிலையமும் செயற்இழந்துள்ளது

.

இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன.

மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு புதிதாக எரிபொருள் தேவை

காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மி;ன்சாரவிநியோகத்தை  இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.

வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்தியகிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின்  பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கி;ன்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை  இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும்  ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.