சிறுவர்களின் தலையை துண்டிக்கும் படங்கள் குறித்த பைடனின் கருத்தினால் சர்ச்சை

142 0

பயங்கரவாதிகள் சிறுவர்களின் தலையை துண்டிக்கும் படங்களை நான் பார்ப்பேன் என நினைத்துகூட பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமைக்கு வெள்ளை மாளிகை புதிய விளக்கத்தை அளித்துள்ளதுடன் பைடன் அவ்வாறான படங்களை பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை முழுமையான தீமையான செயல் என வர்ணித்துள்ள ஜோ பைடன் பயங்கரவாதிகள் சிறுவர்களின் தலைகளை துண்டிக்கும் படங்களை பார்ப்பேன் என நினைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையின் பின்னர் வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன்  ஜோ பைடன் அவ்வாறான படங்களை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன – எனினும்  இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அதனை நிராகரித்துள்ளனர்.

வார இறுதியில் இடம்பெற்ற தாக்குதல்களிற்கு பதில்அளிக்கவேண்டிய உரிமையும் கடமையும் இஸ்ரேலிற்குள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இஸ்ரேலுடன் தோளோடுதோள் நிற்க்கும் தேவையான எந்த உதவியையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.