அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணத்தைக் கொள்ளையடித்த தம்பதியினர் கைது

136 0

அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் இரும்புப் பணப்பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை பிரதேச மல்பெட்டாவை பகுதியை சேர்ந்த கணவன் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இரும்புப் பணப்பெட்டியை உடைத்து 19 இலட்சத்து 12 ஆயிரத்து 148 ரூபாய் திருடப்பட்டதாக செயலகத்தின் சார்பாக  அம்பலாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விசாரணையின் போது கைது செய்யப்பட்ட தம்பதியினருடன் நெருங்கிய தொடர்புடைய வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குறித்த கொள்ளையைச் செய்ததாகவும் கொள்ளையடித்த பணத்தில் சிலவற்றை மூவரும் பகிர்ந்து கொண்டதாகவும் குறித்த நபருக்கு வங்கி கணக்குகளிலும் பண வைப்புச் செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.