தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் வகையில் இம் மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ம் திகதி வரை நடைபெற மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது
இவ் ஏற்பாடானது நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம் பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் எழுத்துமூலமாக கொண்டுவரப்பட்டது.
இதனால் கல்வி ராஜாங்க அமைச்சர் ஒரு நீண்ட விளக்க கடிதத்தினை மத்திய மாகாண ஆளுநர்க்கு அனுப்பி வைத்துள்ளதோடு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை பிற் போடுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தினை அறிந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பித்து நவம்பர் 4ம் திகதி முடிவுறும் வண்ணம் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.