இந்தியாவிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகளைக் கொண்டுவர முயன்ற சுங்க வருமான கண்காணிப்புக் குழுவினர் கைது

74 0

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் மூடைகளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சி செய்த சுங்க வருமான கண்காணிப்பு குழுவொன்றை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் வைத்து கொள்கலன் ஒன்றை சோதனை மேற்கொண்ட போது பட்டாணி என்ற பெயரில் 17 மெற்றிக்தொன் நெல் மூடைகள் அதில் இருந்து சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மீட்டுள்ளனர்.

குறித்த கொள்கலன் கொழும்பு மருதானை பிரதேசத்தில் உள்ள இறக்குமதியாளரின் பெயருக்கு அனுப்பப்ட்டுள்ளது.

குறித்த நெல் மூடைகள் அடங்கிய கொள்கலன் சுங்கத்திலிருந்து வெளியேறினால் நாட்டுக்கு ஐம்பத்தொரு இலட்சம் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.