நுவரெலியா மாவட்டத்தில் வெலிமடையில் ரேந்தபொல – அம்பேவல வீதியின் அண்மித்த பகுதியில் நேற்று புதன்கிழமை (11) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உலக முடிவு மலைத் தொடரை நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மண் சரிவு ஏற்படக் கூடிய அபாயத்ம் காணப்படுவதால் இவ் வீதி மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.