சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023) எங்கள் தமிழாலயத்தில் எளிமையான ஆனால் இதயப்பூர்வமான நிகழ்வு நடைபெற்றது. தங்களுடைய தன்னலமற்ற பணியில் சிறந்து விளங்கும் அனைத்து தன்னார்வ ஆசிரியர்களுக்கும் அவர்களின் தூய்மையான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வெள்ளை ரோஜாவை வழங்கி கௌரவித்தோம். பாடசாலை அதிபர் திரு.கந்தசாமி செந்தில்குமரன் அவர்கள் தனது சிறு உரையில் ஆசிரியர்களின் பெறுமதியான தொண்டுப் பணிகளைப் பாராட்டினார். பெற்றோர்களின் உற்சாகமான கரவொலியுடன் ஆசிரியர்களுக்கு வெள்ளை ரோஜாக்களை கொடுத்து இளைய மாணவர்கள் தங்கள் நன்றிகளை வெளிப்படுத்தினர். இது எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Am Tag des Lehrers (05.10.2023) wurde in unserem Thamilalayam eine bescheidene, aber herzliche Feier abgehalten. Wir ehrten alle ehrenamtlichen Lehrkräfte, die sich mit ihrer selbstlosen Arbeit auszeichnen, indem wir ihnen eine weiße Rose überreichten, die für ihre reine Hingabe steht. Der Schulleiter, Herr Kandasamy Senthilkumaran, würdigte in seiner kurzen Rede die wertvolle gemeinnützige Arbeit der Lehrerinnen. Die jüngsten Schüler zeigten ihre Wertschätzung, indem sie den Lehrerinnen ebenfalls weiße Rosen schenkten, begleitet von einem begeisterten Applaus der Eltern. Es war eine bewegende Geste der Anerkennung für die hingebungsvolle Arbeit unserer Lehrerinnen und Lehrer.