மல்லாவி மத்தியகல்லூரியில் பாடசாலைதோட்ட கண்காட்சி

120 0

முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைப்புடன் கூடிய பாடசாலைத் தோட்ட கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்ஸின் ஆலோசனையின் பேரில் மாகாண விவசாய திணைக்களத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முயற்சியுடன் கூடிய இந்த கண்காட்சி நேற்று (10.10.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாடசாலை மாணவர்களினால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பாடசாலையில் கண்காட்சியினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்ததோடு அங்கு உள்ள வீட்டு தோட்டத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கான தலா ரூபாய் 150000.00 காசோலைகளும், சான்றிதழ்களும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் ,கல்வி வலய அதிகாரிகள் ,விவசாய திணைக்கள அதிகாரிகள் , சுகாதார துறை அதிகாரிகள்,பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.