2023 ஆம் ஆண்டுக்கான பயிர்ச் சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இம்முறை சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்நோக்கிய 53,965 விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வறட்சியான வானிலையினால் இம்முறை சிறுபோகத்தில் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் அழிவடைந்தன.
இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதித்தது.