இந்திய வெளிவிவகார அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்

109 0

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலையில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் அவரை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி.சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றிருந்ததோடு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன் பங்கேற்றிருந்தார்.

மேலும் “மீண்டும் கொழும்மை வந்தடைவதை இட்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாளையதினம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதோடு கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் உள்ளிட்ட அரச உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து நாளைமறுதினம் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளதோடு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.

தொடர்ந்து திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணஸ்வர ஆலத்தில் நண்பகலளவில் வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ்  நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.