பொகவந்தலாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இருவரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயது உடையவர்கள் என்றும் அவ்விருவரும் கொழும்பில் வேலை செய்பவர்கள் என்றும் விடுமுறையை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
பெற்றசோ தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இவ்விரு இளைஞர்களையும் சோதனைக்குட்படுத்திய போது, அவ்விருவரிடமும் தலா 5 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொதிசெய்யப்பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இவ்விரு இளைஞர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.