காலியில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி தொடர்பில் வெளியான தகவல்கள்!

61 0

காலி, ரத்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (09) மாலை இடம்பெற்ற  துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பலாங்கொடை பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரது வீட்டின் அருகே வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த  முன்னாள் பொலிஸ் பரிசோதகர்,  உத்தியோகபூர்வ பணியின்போது  இழைத்ததாகக்  கூறப்படும் குற்றம் ஒன்றுக்காக  சுமார் ஒன்றரை வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.