தனியார் பேருந்து உரிமையாளர்களின் திடீர் தீர்மானம்

82 0

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகை சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப் பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறிப்பாக தற்போது இந்த புகைப் பரிசோதனைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் சங்கமாக முடிவெடுத்துள்ளோம் புகைப் பரிசோதனை நடைமுறையை ஜனவரி முதல் கைவிடுவதற்கு. குறிப்பாக எரிபொருளின் தரம் தொடர்பில் சிக்கல் உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனப் பேசப்பட்டு வருகிறது. என்றபோதிலும் டீசலின் தரத்தில் கடும் சிக்கல் உள்ளது. இன்னொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு புகைப் பரிசோதனை செய்யப்படுவதில்லை.அரசு வாகனங்களுக்கும் புகைப் பரிசோதனை இல்லை. எனினும் தனியார் பேருந்துகளும் ஒரே சேவையை வழங்குகிறார்கள். ஒரே கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே, வரும் ஜனவரி மாதம் முதல் எங்கள் பேருந்துகளை புகைப் பரிசோதனையில் இருந்து நீக்குமாறு போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றார்.