இன்று திங்கட்கிழமை (09) அதிகாலை தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொருவரை ஏற்றிக்கொண்டு சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீகொட சிறிரத்ன மாவத்தையில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர், திடீரென மிளகாய்ப் பொடியை வீசி வர்த்தகரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப் பொதியைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.