இன்றையதினம் (08) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இந்திய இழுவை படகுகளின் வருகையால் மிகவும் துன்புற்று இருக்கின்ற இந்த வேளையிலே நாம் பல போராட்டங்கள் பல கலந்துரையாடல்களை நடத்தி வெற்றி காணாத நிலையில் மிகவும் அல்லல்ப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே, ஓரிரு தினங்களுக்கு முன்னர் எமது நாட்டு பிரதமர் அவர்கள் இந்தியா சென்றிருந்த வேளையிலே எமது வீரர்களுடைய பிரச்சினை சம்பந்தமாக அங்கு ஒரு கலந்துரையாடல் நடந்திருக்கின்றது.
அங்கிருந்த டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருடைய கேள்விக்கு நமது நாட்டு பிரதமர் அவர்கள் பதில் அழைத்து இருக்கிறார். அந்த கேள்வியானது இலங்கை கடற்பரப்புக்குள்ளே இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது சம்பந்தமாக முன்மொழிக்கப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பின போது, எமது பிரதமர் அவர்கள் அளித்த பதிலாவது,
இலங்கையின் வடக்கு கடல் மிகவும் நல்ல மீன்பிடி மையமாக இருக்கின்றது. அதன் காரணமாக இந்தியாவில் உள்ள மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள்ளே மீன் பிடிப்பதற்கு இந்தியாவினால் முன்னொளியப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமாக நாம் கரிசினையோடு ஆய்வு செய்து வருகின்றோம்.
இது இரு நாட்டு அரசுகளும் பேசி தீர்க்கக் கூடிய ஒரு விடயம் அல்ல. இது மீனவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே மீனவர்கள் தான் இதைப் பற்றி பேசி ஒரு நல்ல இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். எனவே இருநாட்டு மீனவர்களும் புரிந்துணர்வுடன் பேசி நல்ல ஒரு கருத்தையும் இணக்கப்பாட்டையும் எட்ட வேண்டும் என்றும், அந்த வகையில் இந்த முன்மொழிவுக்கு ஒரு விடை கிடைக்கும் என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.
அவர் பேசியிருக்கின்ற பேச்சின் பிரகாரம் இலங்கை கடற்பிறப்புக்குள்ளே இந்திய மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பதற்கான ஒரு தொனி அங்கே தெளிவாக தென்படுகின்றது. இது இலங்கை வடபுலத்திலே வாழுகின்ற மீனவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை தந்துள்ளது.
எமது கடற்பரப்புக்குள்ளே அந்நிய மீனவர்கள் அல்லது இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது என்பது காலம் காலமாக எமது மீனவர்களிடையே ஒரு முரண்பாட்டையும் ஒரு களப்போரையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. வளங்களை அழிக்கின்றார்கள் வாழ்வாதாரத்தை சூறையாடுகின்றார்கள். அதற்கப்பாலே எங்களது தொழில் உபகரணங்களை அறுத்து நாசமாக்கி எங்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்துகின்றார்கள்.
இந்த வகையிலே கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது இந்திய மீனவர்களாலும், இந்திய தமிழ்நாட்டு அமைச்சர்களாலும், இந்திய மத்திய அரசு அமைச்சர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம், இழுவைமடி தொழிலை முட்டாக ஒழிக்க வேண்டும், எல்லை தாண்டி செல்லுகின்ற மீனவர்களை கண்காணிப்பதற்காக இருநாட்டு கடற்படையும் ரோந்து பணியில் ஈடுபடுவது சம்பந்தமாக ஆராயப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அது அறிக்கியாக்கப்பட்டிருக்கின்ற வேளையிலே எமது பிரதம மந்திரி அவர்கள் சொன்ன கருத்து, அவருடைய உடன்பாடு எமக்கு வேதனையை தருகின்றது.
இலங்கையின் வடபுலத்திலே இருக்கின்ற பலதரப்பட்ட இடங்களை இந்தியாவிற்கு தாரை வார்த்து கொடுக்கிறார்கள். அதானி குழுமம் இப்போது வடபுலத்திலே ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கின்றது. அது தவிர இன்று கடல் வளத்தை கொடுப்பதற்கும் அரசாங்கம் எத்தனை இருக்கின்றது. இது கடற்தொழில் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கின்றது.
இருந்தாலும் நாம் இந்த விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் பட்சத்திலே இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விடயத்திலே அரசாங்கம் முன்னின்று எமது கடலையும் கடல் வளத்தையும் இந்தியாவுக்கு கையளிக்குமேயானால் யாழ்ப்பாண நகரில் மட்டுமல்ல தலைநகரிலும், நாடவிழாவிய ரீதியில் கடத்தொழில் மக்கள் வாழுகின்ற 15 மாவட்டங்களிலும் இந்த போராட்டத்தை நாங்கள் நடாத்தி இதனை முறியடிப்பதற்கு மிகவும் இரிசினையாக இருக்கின்றோம். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விடயத்திலே மிகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இருக்கின்ற மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்திய படகுகளை எமது எல்லைக்குள்ளே வரவிடாது தடுப்பதற்கு முன்வர வேண்டுமே தவிர இதை விட்டு எங்களது கடல் வளத்தை கொடுப்பதாக இருந்தால் வடபுலத்தில் இருக்கின்ற அனைத்தையும் அவர்கள் கையளித்துவிட்டு எம்மையும் இந்தியாவிற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு, இந்த வடக்கு மாகாணத்தையும் இந்தியாவிடம் கையெழித்து விட்டால் நாங்கள் ஓரளவு நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படும்.
எனவே அரசாங்கம் இந்த கடல் வளத்தை கையளிப்பதை மீள் பரிசீலனை செய்துவிட்டு எமது கடல் வளத்தை எம்மிடமே தந்துதவ வேண்டும். ஒரு தவறான முடிவெடுத்து எம்மை அனாதைகளாகி விட வேண்டாம் என்பதை மிகவும் அன்பாக அரசாங்கத்திடம் கேட்டு, இந்தியாவிடம் எமது கடல் வளத்தை கையளிக்கின்ற முன்மொழிவு இரத்து செய்து அதன் ஊடாக எமது வாழ்வாதாரம் சிறக்க அரசாங்கம் எமக்கு கை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
பிரதம மந்திரி அவர்கள் வடபுலத்திலே வாழ்கின்ற மீனவர்களுடைய வேதனைகளும், துன்பர்களும், அவர்களுடைய இடர்பாடுகளும் புரியாத ஒரு புதியவராக இருக்கின்ற படியால் இதுவரை காலம் இல்லாத ஒரு கருத்தை அவர் முன் வைத்திருக்கின்றார். எனவே இந்தியா கேட்ருக்கின்ற முன்மொழிவை உடனடியாக கைவிட வேண்டும் இல்லையேல் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும். இந்த போராட்டத்தின் ஊடாக கடலிலே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டு, களப்பலிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதை இச்சந்தர்ப்பத்திலே எச்சரிக்கையாக விடுகின்றோம் – என்றார்.