வருமானப் பரிசோதகர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்!

100 0

இலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கத்தின் வடக்கு மாகாண அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது நேற்று யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் கலந்துகொண்டார். தொழிற் சங்கத்திற்கான வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததோடு, வருமானப் பரிசோதகர்களது தொழிற் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார். வடக்கு மாகாண வருமானப் பரிசோதகர்களது பேராதரவோடு தொழிற் சங்கம் உத்தியோகபூர்வமாக செயல்வலுப் பெற்றது. தொழிற் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபையின் தலைவராக திரு.ச.போல் தர்சாந், செயலாளராக திரு.கோ.ஜெகஜீவன், பொருளாளராக திருமதி.ஜோ.ஆரினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.