பதுளை பண்டாரவளை – பிரதான வீதியில் உடுவர 5 நில்போவில பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுளு ஓயாவில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.
எல்லயிலிருந்து பசறை நோக்கிச் சென்ற கார் ஒன்றே வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து பதுளு ஓயாவில் கவிழ்ந்தது.
அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வாகனம் நீரில் மிதந்து கொண்டிருந்த போது, உரிமையாளர் காரில் இருந்து இறங்கிய பதுளு ஓயா வெள்ளத்தில் நீந்தி உயிர் தப்பியுள்ளார்.