மலேசிய வெளவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.