2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இந்த சட்டங்களை கொண்டு வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது என்றும் அதனை உத்தேச சட்டமூலத்தின் ஊடாக குறைக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இதன்போது சிவில் அமைப்புகளின் தலைவர்கள், ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இலங்கை பத்திரிகை சங்கம், ஊடக சுதந்திர இயக்கம் மற்றும் சமூக ஊடக ஒன்றியங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக கலந்துரையாடல் அவசியம் என இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் உத்தேச சுதந்திரம், கருத்து சுதந்திரம் முடக்கப்படுவதாகவும் இதன்போது இவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இந்த சட்டங்களை கொண்டு வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது என்றும் அதனை உத்தேச சட்டமூலத்தின் ஊடாக குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் ஆசிய இணையம், இலங்கை சட்டத்தரணிகள் சங்க,ம் தூதரக அதிகாரிகள், ஊடக நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.