புத்தளத்திலிருந்து 6ம் கட்டை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி முன்னாள் மாடு ஒன்று குறுக்கால் பாய்ந்தமையினால் முச்சக்கர வண்டியைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு விபத்தில் சிக்கி காயங்களுக்குள்ளாகிய முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் சிறுவர்கள் இருவரையும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தப் பெண் 40 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.