முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கின்றது.
இந்த நிலையில், நீதிமன்ற பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி த.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.