விண்வெளி நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

113 0

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்கு பிறகு அனைத்து சாத்திய கூறுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதனை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும். அது நடந்த உடன் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்குள் விண்வெளி நிலைய கட்டிட பணிகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்