கடல்-வானிலை ஆராய்ச்சிக்கு அடுத்த மாதம் 2 செயற்கைகோள் ஏவப்படும்-இஸ்ரோ

350 0

201607221145047550_Ocean-and-weather-research-satellites-to-launch-on-next_SECVPFபெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வானிலை ஆராய்ச்சி மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–2, செயற்கை கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.

இதேபோல் கடல் சார் மற்றும் கடலில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய பி.எஸ்.எல்.வி செயற்கை கோளை ஏற்கனவே அனுப்ப திட்டமிட்டு இருந்தோம்.இந்த செயற்கை கோளும் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்.ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் அவைகளின் இலக்கை அடைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.