கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார் !

203 0

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி  தமிழக ஆய்வாளர் இன்று காலமானார் . தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்த இவர் தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வந்தவராவார்.

இவரின் குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம் என்று தமிழின் அடி ஆழத்தைத்தேடி நடத்திய தேடல்கள் காலத்தால் அழியாதது,தமிழுக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தச் சீரிய தமிழின் ஆய்வாளர் பாலு அவர்கள் கடந்த பல மாதங்களாகப் புற்று நோய்க்கு இலக்காகித் தனது நாக்கின் ஒரு பகுதியை அகற்றிய நிலையிலும் தமிழுக்காகத் தொடர்ந்து உழைத்து வந்திருந்தார் .தனது இறுதி நாட்களில் முற்றாகப் பேச முடியாது போனாலும் இறக்கும்வரை தமிழுக்காக எழுதிக்கொண்டிருப்பேன்  என எடுத்துக்கூறிய பாலு அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்த செய்தி தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.