நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த கோரும் கோரிக்கை மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!

58 0
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு அமைந்த கோரிக்கை மனுவினை நேற்று (04) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் சிறிதரன் எம்.பி. கையளித்தார். 

இலங்கை தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கோரி கடந்த 2ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.

இவ்விடயம் தொடர்பான கோரிக்கை மனுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸுக்கு (antonio guterres) அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்றைய தினம் மனுவை சிறிதரன் எம்.பி. கையளித்தார்.