தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் இரசாயனப் பொருட்களை ஒழுங்குபடுத்த தீர்மானம்

57 0

கைத்தொழில், விவசாயம், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற அமைதியான பணிகளுக்காக பல்வேறு இரசாயனப் பொருட்கள் பாரியளவில் எமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் நைத்ரிக் அமிலம், குளோரின், ஐதரசன் பரவொட்சைட்டு, பொட்டாசியம் சயனயிட், சோடியம் சயனயிட், நைத்ரோமெதேன் மற்றும் சோடியம் ஏசைட் போன்ற இரசாயனப் பொருட்கள் அமைதியான பயன்பாட்டுக்குப் போலவே சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும்  பயன்படுத்தக் கூடிய இரட்டைப் பயன்பாட்டுத்தன்மை கொண்டவையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பால், பானவகைகள், எண்ணெய் சார்ந்த கைத்தொழிற்துறை, நீர் சுத்திகரிப்புப் போன்ற பல்வேறு கைத்தொழில்களுக்காக பயன்படுத்தப்படும் குறித்த இரசாயனப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைகின்ற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆபத்துக் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், அவ்வாறான இரசாயனப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு  சட்ட ரீதியான ஏற்பாடுகளை விதிப்பதற்கும், குறித்த ஒழுங்குபடுத்தல் பணிகள் இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தை நடைமுறைப்படுத்தும் தேசிய அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.