Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சி நிகழ்வு.

285 0

கடந்த 30.09.2023 சனிக்கிழமை அன்று Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சியோடு தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களும் 22வது ஆண்டில் எழுச்சி பூர்வீகமாக நினைவு கூரப்பட்டார்.

Sinsheim செயற்பாட்டாளர் திரு.நவனேஸ் ரவி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, Bruchsal செயற்பட்டாளர் திரு.நாராயணபிள்ளை தேவஞானம் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க தியாக தீபத்தின் உருவப்படத்திற்கு Landau தமிழாலய நிர்வாகி திரு.கந்தசாமி குலேந்திரராசா அவர்களும் சமூக நலன்வரும்பி திரு.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் மாலை அணிவித்தனர். கேணல் சங்கர் அவர்களின் உருவப்படத்திற்கு Bruchsal செயற்பாட்டாளர் திரு.திருநாவுக்கரசு ஜீவராஜா அவர்களும், Mannheim செயற்பாட்டாளர் திரு.சுபேந்திரன் அவர்களும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து சிறார்களின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. செல்வி.கீர்திகா மதியழகனும் செல்வி.மதுஷா கணேசானந்தனும் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க நடனம்,பாடல் உரை என அரங்க நிகழ்வுகள் சிறப்பாக அமைந்தன. இறுதியாக தமிழீழத் தேசியக் கொடி இறக்கி வைக்கப்பட்டு
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிக்கும்” என்ற பாடலோடு நினைவெழுச்சி நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.