நீதவான் சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிராகவும் நீதித்துறையின் சுயாதீனம் காக்கவும் தமிழ் தேசத்தின் இருப்பை காக்கவும் கோரி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 9:30 மணி தொடக்கம் 11 மணி வரை கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பக நடைபெற்றது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.