முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் தொடர்பில் டிரான் அலஸ் உத்தரவு

81 0

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதனால் தாம் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாகவும் கடந்த 23 ஆம் திகதியிடப்பட்டு கையொப்பமிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்திருந்ததுடன் குறித்த கடிதம் கடந்த 28 ஆம் திகதி ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீதிபதி பதவி விலகல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிதியரசர், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.