வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை பொலிசார் அடாத்தாக பிடிக்கமுடியாது

353 0

axw-450x253வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல்துறை அடாத்தாக பிடிக்கமுடியாது இது தொடர்பில் உரியவர்களுன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வலி. வடக்குப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் நேரடியாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதிகள் உள்ளிட்ட சில இடங்களை பொலிசார் மீண்டும் அடாத்தாக கையகப் படுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,வலி.வடக்கில் விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல் துறை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் பலரும் எனது கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்தனர். பாதுகாப்பு அமைச்சினால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தினை பொலிசார் எவரது அனுமதியும் இன்று பிடிக்கமுடியாது .

இது மக்களின் இயல்பு நிலையுடன் தொடர்பு பட்டவிடயம் என்பது மட்டுமன்றி அப்பி்பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்காக ஒப்பந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு நிதி நடவடிக்கைகளும் ஆரம்பமான பின்னர் பொலிசார் கையகப்படுத்துவதானது நிர்வாக தலையீடாக அமையக்கூடாது. எனவே இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்படும் . என்றார்.